2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணத்தில், பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகொண்ட 4 இளைஞர்கள், ஊரவர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில், மாலை வேளைகளில் ஒன்றுகூடும் இளைஞர் குழுவொன்று, அவ்வீதி வழியாக தனிமையில் செல்லும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்து வந்துள்ளனர்.

இளைஞர்களின் அந்தச் செயலை ஊரவர்கள் நீண்ட நாள்களாக அவதானித்து வந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும், பொலிஸார் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று (14) மாலை வழமை போன்று, அப்பகுதியில் ஒன்றுகூடிய அந்த இளைஞர் குழுவினர், பெண்களுடன் சேட்டை புரிந்தபோது, அங்கு ஒன்றுகூடிய ஊரவர்கள், அக்குழுவிலிருந்த நான்கு இளைஞர்களைத் தாக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X