2025 மே 15, வியாழக்கிழமை

சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்வி பயிலும் இரு வறிய மாணவிகளின் கற்றல் செயற்பாடுகளை  ஊக்குவிக்கும் நோக்குடன் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிகழ்வு, கல்லூரி முன்றலில் அண்மையில் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி உமாபதி ரவிகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திருமதி கமலராணி கிருஷ்ணபிள்ளை கலந்துகொண்டு, இரு மாணவிகளுக்குமான சைக்கிள்களை வழங்கிவைத்தார்.

குப்பிழானிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் ஸ்ரீதரன் மதிசொரூபி, குப்பிழானிலிருந்து புலம்பெயர்ந்து சுவிஸில் வசித்து வரும் கந்தலிங்கம் இராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்படி சைக்கிள்களுக்கான நிதிப் பங்களிப்புகளை வழங்கி உதவியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .