Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
எந்த தடுப்பூசி விரைவாக கிடைக்கிறதோ, அதனை பெற்றுக் கொள்ளுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
சைனோஃபாம் தடுப்பூசி தொடர்பில் பொது மக்களிடையே காணப்படும் ஐயப்பாடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் ஐந்து வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் இன்று வரை இலங்கையில் 10 மில்லியன் மக்களுக்கு சைனோஃபாம் தடுப்பூசி தான் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
எனவே, தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் தடுப்பூசிகளிடையே வேறுபாடுகள் காணப்படாது எனத் தெரிவித்த அவர், ஆனால் நாங்கள் இந்தத் தடுப்பூசியை தான் போடுவோம் என பார்த்துக் கொண்டிருக்காது, எந்தத் தடுப்பூசி எமக்கு விரைவாக கிடைக்கின்றதோ, அந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டுமெனவும் கூறினார்.
'சைனோஃபாம் தடுப்பூசி பற்றி பொது மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம், ஒரு ஐயப்பாடு நிலவுகின்றது. இது சீனத் தயாரிப்பு எந்தளவுக்கு இது நோயை குறைக்கும் என்ற ஐயம் காணப்படுகின்றது
'இது சீனாவில் மட்டுமல்லாது பல நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படுகின்றது. அதாவது, பல நாடுகளில் சைனோ.பாம் தடுப்பூசி வழங்கப்பட்டதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
'எனவே, இந்த தடுப்பூசி தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், சைனோஃபாம் தடுப்பூசி மூலம் இறப்புகளையும் நோய் தாக்கத்தையும் குறைக்க முடியும் என தெரியவந்துள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
32 minute ago
52 minute ago
1 hours ago