2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சைவ ஆலயங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம்

Editorial   / 2018 மார்ச் 01 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன் 

வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர் ஆலய முன்றலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 9 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தவுள்ளதாக சைவ மகா சபை அறிவித்துள்ளது.

இவ் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்தின் இறுதியில், ஜனாதிபதி, பிரதமர், வடமாகாண முதலமைச்சர், ஆகியோருக்கு மகஜர்களைக் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X