2025 மே 10, சனிக்கிழமை

சைவப்புலவர் சங்க செயற்குழுக் கூட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் விசேட செயற்குழுக் கூட்டம் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (20) முற்பகல் 9 மணிக்கு, இல:143, கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இச்செயற்குழுக் கூட்டத்தில், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்குரிய இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைகளை நடத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையால், அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு, அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X