Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 14 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என சிறீரெலோ இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தும், இதுவரையில் அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நடைபெற்று முடிந்ததேர்தலின் போது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தாலும், ஆட்சிக்கு வந்து 18 மாதங்களாகியும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அதுபோல், மீள்குடியேற்றமும் பூர்த்தியாக்கப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஓர் அர்த்தமற்றதாக இருக்கின்றது. எனவே, சிறைகளில் பல வருடங்களுக்கு மேலாக வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியான நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும் என்பதுடன், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் நிலைப்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
பல வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடும் தாம் எப்போது விடுதலையாவோம் என ஏக்கத்துடன் வாடும் அரசியல் கைதிகளின் நிலைப்பாட்டினை கருத்திற்கொள்வதுடன், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் நிலைப்பாட்டினையும் ஜனாதிபதி தெரிந்துகொண்டு,உடனடியான தீர்வினை வழங்கும் முகமாக தனது நல்லாட்சிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உத்தியோக பூர்வமுடிவுகளையும் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .