2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

 

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் அமர்வில், நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 235 சாட்சியங்கள் சாட்சியளிக்கின்றன.  

வழமைபோன்று இல்லாமல் இந்த அமர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 5 பேரின் சாட்சியங்களை பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அதிகளவானவர்களுக்கு சாட்சியமளிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனைவிட ஒவ்வொருடைய சாட்சியங்களும் ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது.

பதிவு செய்யப்பட்டவர்களைத் தவிர புதிதாக வரும் 50 பேரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளது.

இன்று ஆரம்பமாகிய அமர்வுகள் தொடர்ந்து 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியிலும் நடைபெறவுள்ளது.
இன்றைய அமர்வை வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவுகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த போதும், குறிப்பிடத்தக்களவு மக்கள் அமர்வில் சாட்சியமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X