Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 14 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட உல்லாச ஜனாதிபதி மாளிகையை வடமாகாண சபைக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைக் கோரும் பிரேரணை வடமாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. இதன்போது அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்த பிரேரணையைக் கொண்டு வந்தார்.
பல மில்லியன் ரூபாய் பெறுமதியில் கட்டப்பட்டுள்ள அந்த மாளிகையை வடமாகாண சபைக்கு வழங்க வேண்டும். வடமாகாண சபைக்குட்பட்ட வதிவிட முகாமைத்துவப் பயிற்சிகள், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பிரதிநிதிகளை தங்க வைப்பதற்கும், மாநாடுகளை நடத்துவதற்கும் பொருத்தமான கட்டடங்கள் இல்லாமல் இருக்கின்றது. இந்த கட்டடத்தை வழங்குவதன் மூலம் அது நிவர்த்தி செய்யப்படும் என அவைத்தலைவர் கூறினார்.
இந்தப் பிரேரணை தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்று இந்த மாளிகையைப் பார்வையிட்டபோது, இதனை வடமாகாண சபைக்குத் தருமாறு கோரியிருந்தேன். அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும், முடிவடைந்ததும், கையளிப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் ஜனாதிபதி என்னிடம் கூறியிருந்தார் என முதலமைச்சர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .