2025 மே 21, புதன்கிழமை

‘ஜனாதிபதி இரட்டை வேடம் தரிக்கிறார்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் நல்லவர் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, தமிழ் மக்களிடம் இரட்டை வேடம் அணிவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துக் கருத்துரைத்த அவர்,

யாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை, பெரு நிகழ்வுகளாக எடுத்து விடுவிக்கின்ற அரசாங்கம், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் இதற்கு எதிர்மாறான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருவதாக, அவர் குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில், நல்லவர் போன்று காணிகளை மீளக் கையளிக்கும் ஜனாதிபதி, மறுபுறத்தில் முல்லைத்தீவில் தமிழ் மக்களின் காணிகளை பறிக்கும் நடவடிக்கைகளையே அரங்கேற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டியதுடன், இவ்வாறு யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கும் முல்லைத்தீவில் உள்ள பெரும்பான்மையினத்தவர்களுக்கும் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள முனைகிறாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .