2025 ஜூலை 10, வியாழக்கிழமை

‘ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய காணிகள் விடுவிக்கப்படவேண்டும்’

Editorial   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

“ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

காணி விடுவிப்புத் தொடர்பில் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் அனைத்தும் 2018 ஆம் ஆண்டு அதாவது இந்த வருட இறுதிக்குள் முழுமையாக விடுவிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும். அத்தோடு வல்லை – அராலி வீதியையும் விடுவித்து மக்கள் பாவனைக்கு அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .