2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஜீவனை சந்தித்தார் ஸ்ரீதரன்

Editorial   / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் ஸ்ரீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (16) காலை இடம்பெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு, ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள  நீர் வழங்கல் தொடர்பிலான விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X