Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 22 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் முனகூட்டியே அச்சிடப்பட்ட ஒரே உற்பத்தி மற்றும் முடிவுத் திகதி இடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை ஜூஸ் பக்கெட்களை , 16 குளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுசுகாதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
“குழந்தைகள் பருகும் ஒரு சில வாரங்களே காலவதி திகதி இடக்கூடிய ஜூஸ் பக்கெட்களை ஒரு வருட காலப்பகுதி குறிப்பிட்டு குடாநாட்டின் பல இடங்களில் விற்பனை செய்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் மாத்திரமின்றி நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது" என பொதுசுகாதார பரிசோதகர் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
அதனை அடுத்து , மன்று அனைத்து ஜூஸ் பக்கெட்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சகல ஜூஸ் பக்கெட்களையும் மீளபெற்று அழிக்குமாறும் உத்தரவிட்டது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago