Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.நேசமணி
டொக்டர் அம்பேத்காரின் பிறந்ததின வாரத்தில், பொன்னாலையில் இலவசக் கல்வி நிலையம் ஒன்று, திங்கட்கிழமை (17) ஆரம்பிக்கப்பட்டது. வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் திருவடிநிலை வீதி பொன்னாலையில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்த வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொன்னாலை கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் மீளக்குடியேறியுள்ளனர். அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், மாணவர்களின் கல்வி பெரும் பின்னடைவாக இருந்து வருகின்றது.
இந்த நிலையிலேயே வெண்கரம் அமைப்பு இங்குள்ள மாணவர்களுக்கான கல்விச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.
டொக்டர் அம்பேத்காரின் சிந்தனைகளுக்கு ஈழத்தில் செயல் வடிவம் கொடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கல்விச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago