2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

டைனமைட் பயன்படுத்தியவருக்கு பிணை

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புங்குடுதீவு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடிமருந்தினை பாவித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவரை, 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணைகளில் செல்ல, ஊர்காவற்துறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (23) அனுமதியளித்தார்.

கடந்த 18ஆம் திகதி டைனமைட் பாவித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் புங்குடுதீவு கடற்பரப்பில் வைத்து குருநகர் பகுதியினைச் சேர்ந்த 30 வயதுடைய மீனவரை கடற்படையினர் கைது செய்து யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் இவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று புதன்கிழமை (23) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி மீனவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X