2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

டிவி திருடருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2017 ஜனவரி 22 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், புனிதநகர், கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றின் தொலைக்காட்சிப் பெட்டியினை திருடிய இளைஞனை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி, சனிக்கிழமை (21) உத்தரவிட்டார்.

கடந்த வருடம் நவம்பர் மாதமளவில், புனிதநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அதே பகுதியினை சேர்ந்த இளஞன் ஒருவர், 68,000 ரூபாய் பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டியைத் திருடிச் சென்றிருந்தான்.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த பருத்தித்துறை பொலிஸார், சந்தேகநபரான இளைஞனை, வௌ்ளிக்கிழமை(20) கைது செய்திருந்தனர். அத்துடன், திருடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியினையும் கைப்பற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X