Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியை, “பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம்” என அறிவித்து, மக்கள் மத்தியில், பார்த்தீனியம் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில், யாழ். மாவட்டப் பிரதேச செயலாளர்களை இணைத்து, பார்த்தீனிய அழிப்பு சம்பந்தமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாமென்று ஆராயும் கூட்டமொன்று, நேற்று (05) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆளுனர் மற்றும் அரசாங்க அதிபரின் அனுசரணையுடன், சகலதுறை உத்தியோகத்தர்களும் இணைந்த வகையில், சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், தனியார்த் தோட்டங்கள், பொது இடங்கள் போன்றவற்றில், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், இந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். மாவட்டப் பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன், சிவன் அறக்கட்டளை ஆலோசனைக் குழுவின் தலைவர், யாழ். பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான சி.மோகனதாஸ், வடமாகாணத்தின் முன்னாள் செயலாளர் ஆ.சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
43 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
9 hours ago