Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் உள்ள கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில், இன்று (05) டிப்பர் வாகனத்தைப் பழுதுப்பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவராவாரென, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தார்.
பாரம்தூக்கி (ஜக்) மூலம் டிப்பர் வாகனத்தின் சுமைப் பெட்டியைத் தூக்கிவிட்டு, அதன் கீழிருந்து டிப்பரைப் பழுதுப்பார்த்துக் கொண்டிருந்தபோது, பாரம்தூக்கி நழுவியதில், டிப்பர் வாகனத்தின் பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது. இதன்போது, இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago