Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஆறு பேருந்துகளில் டீசல் திருடப்பட்ட சம்பவத்தில் 4 சந்தேகநபர்கள் கோப்பாய் பொலி்ஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் அனைத்தும் கோண்டாவில் பேருந்து நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தரித்து நின்ற 6 பேருந்துகளில் டீசல் திருடப்பட்டுள்ளதாக கடந்த 6 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோண்டாவில் சாலையின் உயர் அதிகாரிகள் இந்த முறைப்பாட்டினை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டில் 6 பேருந்துகளில் டீசல் திருடப்பட்டதாகவும் பேருந்து ஒன்றில் இருந்து ஒரு தொலைக்காட்சியும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago