Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கின் தாக்கத்துக்குள்ளான பாடசாலை மாணவி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (15) உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. இவ்வாறு உயிரிழந்தவர், பொஸ்கோ பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்றவரும் கலட்டி அம்மன் வீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாரா வயது (09) என்ற மாணவியே ஆவார்.
கடந்த மூன்று நாட்களாக, குறித்த சிறுமி உடல் சோர்வாகக் காணப்பட்டுள்ளார். பாடசாலையிலும் மாணவி உடல் சோர்வாகக் காணப்பட்ட நிலையில், பாடசாலையிலிருந்து, நேற்று அழைத்து வந்த பெற்றோர், தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்றிருந்தனர். பின்னர் அன்றையதினம் மதியம் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். இந்நிலையிலேயே குறித்த பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இறப்பு விசாரணைகளை, யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் மேற்கொண்ட உடற்கூற்றுப் பரிசோதனையின்போது டெங்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக பெற்றோருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
2 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025