2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘டெனிஸ்வரனை நீக்குமாறான கடிதம் கிடைக்கவில்லை’

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஸன், எஸ். ஜெகநாதன்

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சரான பா. டெனிஸ்வரனை, வட மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு, கடிதமேதும் தனக்குக் கிடைக்கவில்லை என வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், இன்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.

ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டம், வவுனியாவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், டெனிஸ்வரனை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், வட மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு, விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X