Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், தனது அமைச்சுப்பதவியில் இருந்து இராஜினாமா செய்வது தொடர்பில் நாளை (14) உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைமைக் குழு, வவுனியாவில், நேற்றுக் காலை கூடி அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது டெனீஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த தலைமைக் குழு கூட்டத்தின்போது, டெனீஸ்வரனை, முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்துக்கு வழிசமைக்கும் முகமாக, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யுமாறு டெலோ தலைமைக் குழு கோரியிருந்தது. எனினும், உடனடியாக பதவி இராஜினாமாவுக்கு மறுப்பு தெரிவித்து, வந்த டெனீஸ்வரன் கால அவகாசத்தை கோரியிருந்தார்.
இந்நிலையில், கட்சியின் கோட்பாடுகளுக்கு அமைவாக, தனது முடிவை இன்று அறிவிப்பதாக, குறித்த கூட்டத்தில் டெனீஸ்வரன் தெரிவித்திருந்தார். எனினும் எவ்வித முடிவுகளையும் டெனீஸ்வரன் இன்று அறிவிக்கவில்லை.
இந்நிலையில், டெனீஸ்வரனின் நிலைப்பாடு குறித்து தொலைபேசியூடாக எழுப்பிய வினாவிக்கே, இராஜினாமா செய்வது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை விடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
டெனீஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,
“இராஜினாமா தொடர்பில் நாளை (14) உத்திகோகபூர்வமாக அறிவிக்கவுள்ளேன். வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் குறித்து நான் கவலை அடைகின்றேன். கட்சியின் கோட்பாடுகளுக்கு அமைவாக எனது உத்தியோக பூர்வ அறிவிப்பை நாளை(14) அறிவிக்கவுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago