2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

டெனீஸ்வரன் விவகாரம்; 16இல் சிறப்பு சபை அமர்வு

Editorial   / 2018 ஜூலை 10 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வடக்கு மாகாணப் போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராகவிருந்த டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கிறார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் மாகாண சபைச் சிறப்பு அமர்வை, எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடத்தவுள்ளதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். 

வடமாகாண சபையின் அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (10) நடைபெற்றது. இதன்போதே, அவைத்தலைவர் மேற்கண்டவாறு அறிவித்தல் விடுத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X