2025 ஜூலை 19, சனிக்கிழமை

தாக்குதல் சம்பவத்தில் கைதான தந்தை, மகன் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொய்யாத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைதான தந்தை மற்றும் மகன் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் திங்கட்கிழமை(04) உத்தரவிட்டார்.

கருத்து வேறுபாட்டு காரணமாக இரு உறவினர்கள் தமக்குள் மோதிக்கொண்டனர். இச்சம்பவத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந் நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் இருவரையும் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X