Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழக்கிறார்.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். எட்டு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
அதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நான்கு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆறு பேர், சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் நான்கு பேர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒவ்வொரு உறுப்பினர் என 12 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
9 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
2 hours ago