2025 ஜூலை 19, சனிக்கிழமை

தென்னிலங்கையில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பதை நடக்கவிடக்கூடாது

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தமிழர்களின் ஒற்றுமையானது சிதைவடைவதை தென்னிலங்கையில் இருக்கும் சிலர் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு இணையாக நாமும் நடந்துவிடக்கூடாது என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

அமைச்சின் திணைக்களத்தின் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நான் ஒரு போதும் துணை நிற்கமாட்டேன். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு பிறிதொரு அமைப்பை ஏற்படுத்துவதை ஏற்கமுடியாது.

தற்போது, ஒரு அமைப்பு உருவாகும். பின்னர் அது இரண்டு, மூன்று என்று பின் நாற்பது அமைப்புக்கள் உருவாகும். இவ்வாறு தமிழ் மக்கள் பிரிவடைவது, தென்னிலங்கையில் இருக்கும் சிலர் எதிர்பார்ப்பது போல நடந்துவிடும் என்றார்.

மேலும், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அமைச்சுக்கு 2015 ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நிதியில் 99.93 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.

பிரமாண அடிப்படையிலான நிதியாக 310.82 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 115 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, 310.61 மில்லியன் ரூபாய் நிதி கடந்த வருடத்தில் செலவிடப்பட்டுள்ளது.

இதனைவிட மீண்டெழும் நிதியில் 20 மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X