2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திருடமுற்பட்டவர் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Princiya Dixci   / 2016 மே 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சிறுப்பிட்டி வைரவர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து திருட முற்பட்ட அப்பகுதியினை சேர்ந்த இளைஞனை, பொதுமக்கள் மடக்கிபிடித்து நையப்புடைத்த பின்னர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளது.

சிறுப்பிட்டிப் பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் வருடாந்த திருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது. 

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து குறித்த இளைஞன் திருட முற்பட்டுள்ளார். 

இவ்வாறு திருட முற்பட்ட இளைஞன், அதே பகுதியினைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனப் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X