2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தீர்மானம் எடுக்கப்படாவிடின் நிலஅளவை செயற்பாடு தொடர்ந்தும் இடம்பெறும்

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

பலாலி சர்வதேச விமான நிலையம் விஸ்தரிப்பு தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் கதைத்து தீர்மானம் எடுக்காவிடின், அங்கு இடம்பெறும் நிலஅளவைப் பணியை தடுத்து நிறுத்த முடியாது என தெல்லிப்பழை பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற அவசர கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு, காணிகள் சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவை மேற்கொள்ளும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வாயிலாக தான் அறிவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த தெல்லிப்பழை பிரதேச செயலாளர்,

அரசாங்கத்தின் உத்தரவை செயற்படுத்த வேண்டியது அரச அதிகாரிகளின் கடமையாகும். அந்த வகையில், நிலஅளவையாளர்களுடன் செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினை தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படாவிட்டால், அங்கு நடைபெறும் நிலஅளவை பணியை தடுக்க முடியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X