2025 ஜூலை 07, திங்கட்கிழமை

துறைமுக நகர விவகாரம்: ஆதாரம் சேர்க்க ஜன.19

Gavitha   / 2015 நவம்பர் 12 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ். செல்வநாயகம்

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான செயற்பாடுகளை நிறுத்தும்படி நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டு மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு மேலும் ஆதாரம் சேர்ப்பதற்கான திகதியாக ஜனவரி 19ஐ, உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தச் செயற்றிட்டத்துக்காக நீர்கொழும்புக்கும் கொழும்புக்கும் இடையில் 233 ஹெக்டேயர் நிலம், கடலிலிருந்து மீட்கப்படவுள்ளது. இதனால் இந்த பகுதியில் வாழும் 30,000 மீனவர்கள், கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

இந்தச் செயற்றிட்டத்தை அமுலாக்கும் 'சீன தொடர்பாடல் கட்டுமான கம்பெனி லிமிடெட்' எனும் சீனக் கம்பெனிக்கு 20 ஹெக்டேயர் நிலம் உரித்தாகும். 88 ஹெக்டேயர் 99 வருடங்கள் குத்தகைக்குக் கொடுக்கப்படும். 62 ஹெக்டேயர் துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்படும். 63 ஹெக்டேயர் பொது இடமாகும். இங்கு பிரஜைகளுக்கு என்ன உரிமை உள்ளது என்பது, இதுவரை அறிவிக்கப்படவில்லை என மனுதாரர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .