2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தீவுப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான 60 சதவீத வேலைகள் பூர்த்தி

Gavitha   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக, யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளுக்கு குடி வழங்குவதற்குரிய 60 சதவீத வேலைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நீர் குழாய் பொருத்தும் வேலைப்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் உயர் பொறியியல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக வேலணை, மண்டைதீவு, ஊர்காவற்றுறை பகுதிகளில் கடலுக்கு அடியில் பாரிய கற் தூண்கள் மூலம் இணைக்கப்பட்ட நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.  மேலும், குடிநீரைத் தேக்கி வைப்பதற்கு குறித்த தீவுப் பகுதிகளில் பாரிய நீர்த்தாங்கிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆசிய அபிவருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 358 மில்லியன் ரூபாயில் இத்திட்டத்துக்கு செலவு செய்யப்படுகின்றது. இத்திட்டத்தின் ஊடாக மூன்று தீவுப்பகுதிகளையும் சேர்ந்த 12,000 குடும்பங்கள் பயனடைவார்கள். கடந்த காலங்களில் இப்பகுதிகளுக்கு பிரதேச சபைகள், மற்றும்

உள்ளூராட்சி திணைக்களங்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தன. எனினும், வழங்கப்பட்ட நீர் போதுமானதாக இருந்திருக்கவில்லை. இதன் காரணமாக உள்ளூராட்சி திணைக்களம் ஊடாக அரசாங்கத்துக்கு நீருக்கான செலவு அதிகரித்துள்ளது. இத்திட்டம் நிறைவு பெற்றதும், தொடர்ச்சியாக குழாய் நீரை இப்பகுதி மக்கள் வீடுகளுக்கு இணைத்துக் கொள்ள முடியும் என அந்த அதிகாரி கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X