2025 ஜூலை 19, சனிக்கிழமை

துவாரகேஸ்வரன் மீது முறைப்பாடு

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன், தன்னைக் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X