Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ். மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு அடுத்ததாக, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளாதாக, யாழ். போதனா வைத்தியசாலையின் உயர் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தாவடி பகுதியிலேயே டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 111பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் புதிதாக 14 பேர் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.திரிபுர சுந்தரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, உடுவில் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட ஏனைய பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தாவடி பகுதியில் நாளுக்கு நாள் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், டெங்கு நோயின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது.
அதி வேகமாக பரவும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையூடாக மேற்கொண்டு வருகின்ற போதிலும், பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நுளப்பு பெருக்கத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உள்ளது.
பொறுப்பற்ற முறையில் இப்பகுதி மக்களால், அநேகமான இடங்களில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் வீசப்பட்டுள்ளன. ஜஸ்கிரீம் மற்றும் தண்ணீர் போத்தல்கள் பெருமளவு தேங்கி காணப்படுகின்றன.
மேலும், உக்கக் கூடிய கழிவுகள் கூட, உரிய முறையில் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த விடயத்தில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களை மழை நீர் படாத இடத்தில் சேகரித்துவைத்து, அவற்றை யாழ். மாநகர சபையிடம் ஒப்படைத்து மீள் சழற்சிக்காக அனுப்பிவைக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில், படிப்படியாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொது மக்கள், டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கையில் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும். இற்காக பல்வேறு செயற்றிட்டங்களை நேற்றும் இன்றும் மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
.
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago