Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களில் உரிய முறையில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கடந்த 3ஆம் திகதி முதல் தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்தது. அதன் மூலம் பொதுமக்கள் தமக்கான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்காக அலுவலகங்கள், திணைக்களங்கள் ஆகியனவற்றில் தகவல் வழங்குவதற்கு என பிரத்தியோகமாக உத்தியோகஸ்தர் ஒருவர் இருப்பார் எனவும் தெரிவிக்கபட்டது.
இந்நிலையில் யாழில் உள்ள பிராதன அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களில் அவை உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை.
யாழ்.மாவட்ட செயலகத்தில் தகவல் வழங்குவதற்காக மேலதிக அரசங்க அதிபரே நியமிக்கப்பட்டு உள்ளார். யாழ்.மாநகர சபையில் இதுவரை எந்தவொரு அதிகாரியும் இதற்கு என நியமிக்கப்படவில்லை.
அது தொடர்பில் பிரதி ஆணையாளரிடம் கேட்டபோது,
நாம் மக்களுக்கு எந்த தகவல்களையும் மறைக்கவில்லை. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டம் தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்த சில மாதங்கள் தேவை. உங்களுக்கு என்ன தகவல் வேண்டுமோ அது தொடர்பில் கடிதம் மூலம் கேளுங்கள். அதற்கான பதில்களை வழங்குகின்றோம் என தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச செயலகத்தில் தகவல்களை வழங்குவதற்கு நிர்வாக உத்தியோகத்தரே நியமிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் கேட்போது, தமக்கு இப்போது தான் அறிவித்தல்கள் கிடைக்கபெற்று உள்ளன. இன்னமும் கேள்வி பத்திரம் தயாரிக்க வில்லை ஏதேனும் தகவல்கள் தேவை எனில் உரிய அதிகாரிகளிடம் தற்போது கேட்டு பெற்றுக்கொள்ள முடியும். மிக விரைவில், எமது பிரதேச செயலகம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து முடித்து விடும் என தெரிவித்தார்.
அதேபோன்று நல்லூர் பிரதேச சபையில் பொது சன தொடர்பாடல் உத்தியோகத்தரே தகவல் வழங்கும் உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
4 hours ago