2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தகவல் கொடுக்காதவர் கைது

Editorial   / 2019 மே 10 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

ஆபத்தான வெடிபொருள் தொடர்பில் தகவல் வழங்காத குற்றச்சாட்டில், கூலி தொழிலாளி ஒருவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

வெற்றிலைகேணி பகுதியில், நீண்டகாலமாக ஆட்கள் அற்று இருந்த வீடொன்றின் காணியை ஒருவர் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். 

அது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினர் வீட்டை சோதனையிட்டனர். அதன் போது வீட்டினுள் சந்தேகத்துக்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை. 

பின்னர் காணியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, குண்டு போன்றதொரு மர்ம பொருள் ஒன்றை வேலி ஓரம் கண்டு பிடித்துள்ளனர். அது தொடர்பில் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த பழனி என்பவரிடம் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது அவர், தான் காணியைத் துப்புரவு செய்யும் போது அந்த பொருள் காணப்பட்டதாகவும் தான் அதனை தூக்கி வேலி ஓரமாக வீசி விட்டு தொடர்ந்து துப்புரவு பணியில் ஈடுபடுவதாகவும்  வீட்டு உரிமையாளரின் மகனே தன்னை துப்புரவு பணிக்கு அமர்த்தியதாகவும் கூறியுள்ளார். 

அதனை அடுத்து வெடிபொருள் தொடர்பில் தொடர்பில் தகவல் வழங்க தவறிய குற்றசாட்டில் அந்நபரை கைதுசெய்த இராணுவத்தினர், அவரை பளை  பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

பளை பொலிசார் குறித்த நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , வீட்டு உரிமையாளரின் மகனை அழைத்தும் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X