2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தங்கம், வலம்புரி சங்குடன் மூவர் கைது

Princiya Dixci   / 2022 ஜூலை 27 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பேசாலை  கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் சங்கு வலம்புரி கைப்பற்றப்பட்டன.

இதனுடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேசாலை  கடற்கரையில் இருந்து சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த  டிங்கி படகு ஒன்றை, கடற்படையினர் பரிசோதித்த போது, அதிலிருந்து 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரிச் சங்கு ஆகியவற்றை கடற்படையினர் மீட்டதுடன், அதில் பயணித்த சந்தேகநபர்கள் மூவரை கைதுசெய்தனர்.

சந்தேகநபர்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ. 09 மில்லியன் என கடற்படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X