2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் தொற்று ஏற்படலாம்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன், என்.ராஜ்

 

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் எனத் தெரிவித்த வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன், தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது எனவும் கூறினார்.

தற்போதைய  வடமாகாண கொரோனா  நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தடுப்பூசி பெற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுகின்றது என, சிலர் கூறுகிறார்கள் எனவும் எனினும் தடுப்பூசி பெற்றவர்களுக்கு தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு நோயின் தாக்கம் தன்மை குறைவாக காணப்படுகின்றது எனவும் அத்தோடு தடிமன் காய்ச்சலுடன்  தொற்று வந்து அந்த நோய் மாறிவிடும் எனவும் கூறினார்.

ஆனால், தடுப்பூசி பெறாதவர்களுக்கு அது இறப்பை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், எனவே அனைவரும் இந்த தடுப்பூசியை பெறுவது அவசியமாகும் எனவும் கூறினார்.

அத்துடன், 'தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் சிலர் அலட்சியமாக செயற்படுகின்றார்கள். அதாவது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுகின்றார்கள்.

'ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே, தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக இறுக்கமாக பின்பற்ற வேண்டிய அவசியம் காணப்படுகின்றது' எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .