Niroshini / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்குத் தடை கோரி, சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்தை ஆராய்ந்த மல்லாகம் நீதவான் நீதிமன்றம், சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையை நாளை (05) சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.
அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும், நாளை (05) பரிசீலனைக்கு எடுக்கவும், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தவணையிட்டது.
பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ், இந்த விண்ணப்பம் சுன்னாகம் பொலிஸாரால், நேற்று (03) மாலை, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த விண்ணப்பம், மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில், இன்று (04) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டது.
அதாவது, போராட்டங்கள் நடத்தப்படுவதால் கொவிட் -19 சுகாதார நடைமுறைகள் மீறப்படுகின்றனவா என்பது தொடர்பில், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெற்று, வெள்ளிக்கிழமை (05) சமர்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும்
வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கவும், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தவணையிட்டது.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago