Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 18 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, யாழில் இருந்து இன்றுக் காலை முல்லைத்தீவு செல்வதற்காக யாழ்ப்பாணம் - மன்னார் வீதியூடாக பயணித்த போது, சங்குப்பிட்டி பாலத்துக்கு சற்று தொலைவில் உள்ள கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்டபோது, அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர், நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாகக் கூறி, நிகழ்வை நடத்தத் தடை விதித்தனர்.
இதன்போது, நீதிமன்ற உத்தரவை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார்.
அவர் புறப்பட்டு ஒரு சில நிமிடத்தில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரின் தடையையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், கோவில் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதோடு, முள்ளிவாய்க்கால் சிறப்புரை ஒன்றையும் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago