Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூன் 13 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
'இனத்தின் தனித்துவம் அழிக்கப்படுகின்ற அல்லது மாற்றியமைக்கப்படுகின்ற சூழ்நிலையில், எமது கலாசாரங்களை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்' என யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட கலாசார பேரவையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. இதில் தலைமையுரையாற்றும் போதே மாவட்டச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
'எந்தவொரு இனத்துக்கும் தனித்துவமான பண்பு காணப்படுகின்றது. இவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். எமது கலைகள், பண்பாடுகளை அழியாது பாதுகாப்பதுடன் புதியவர்களையும் உள்வாங்கிக்கொண்டு செயற்படவேண்டும்.
கலைஞர்களை கௌரவித்தல், ஆவணப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக யாழ்.மாவட்ட கலாசார பேரவை உருவாக்கப்பட்டது. இன்று எமது சமூகத்தில் கொள்ளை, கொலை மதுசார பாவனை, போதைவஸ்து பாவனை, பாலியல் துன்புறுத்தல்கள் போன்றன அதிகரித்து காணப்படுகின்றன.
இந்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடவேண்டும். இவற்றை சமூகத்தில் இருந்து முற்றாக நீக்கவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .