Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில், சுமார் 800 ஏக்கர் காணியை, தனிநபர்கள் சிலர், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணியில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, அன்னாசிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துணை நிற்கின்றனர்” என, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில், நேற்று (29) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில், 1989ஆம் ஆண்டு, 287 ஏக்கர் காணி, 650 பேருக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரித்துக் கொடுக்கப்பட்டது. பின்னர், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக, 1990ஆம் ஆண்டு, மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
“இந்த நிலையில், தற்போது சில தனி நபர்கள், குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகக் கூறி, அப்பகுதியில் உள்ள சுமார் 800 ஏக்கர் காணிகளுக்கு புதிய அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து, அக்காணிகளைக் கையகப்படுத்தியுள்ளனர்.
“எனவே மக்களுக்கு மாந்தை மேற்கு பகுதியில் வழங்கப்பட்டுள்ள காணிகளில் தமது எல்லைக் கற்களைப் போட்டுள்ள வன வளத் திணைக்களம், உடனடியாக மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .