Editorial / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
இலங்கையின் சுதந்திர தினத்தன்று, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்டதன் ஊடாக, தமிழ் மக்கள் இதுவரை கோரி வந்த தனி நாட்டுக் கோரிக்கையை அங்கிகரிப்பது போன்றும் இக்கோரிக்கையை வலுப்படுத்துவது போன்றும் அமைந்துள்ளதென, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முறை சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்படும் வாய்ப்பு இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதெனவும் இந்தச் செயற்பாடானது, தமிழ் மக்கள் இதுவரை கோரிவந்த தனி நாடு, தனிக்கொடி, தனித்தேசிய கீதம் போன்ற கோரிக்கைகளை அங்கிகரிப்பது போன்றும் இக்கோரிக்கையை வலுப்படுத்துவது போன்றும் அமைந்துள்ளதெனவும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வகையில் பார்த்தால், இந்த அரசாங்கம் நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை தடுப்பதென்பது, தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய உணர்வையும் சுயநிர்ணயத்தின் அவசியத்தையும் உணரச்செய்யும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளதெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சிங்கள மொழிக்கும் சிங்கள மக்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளும் இந்த நாட்டில் உள்ள தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமே, பிரிவினைவாதத்தை இல்லாமல் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமெனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago