Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள், 31ஆம் திகதி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவென, யாழ். மாவட்டச் செயலாளரும் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகருமான கே.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தபால் மூல வாக்களிப்பு சனிக்கிழமை (25) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதெனவும் வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கை, 29ஆம் திகதிக்குள் நிறைவு பெறுமெனவும் கூறினார்.
தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்காக, ஜூலை 31ஆம் திகதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் உள்ளவர்களுக்கும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.
அத்துடன், “யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், இதுவரை 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் ஆகக் கூடுதலாகப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago