Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.குகன்
தனியார் கல்வி நிலையங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்குமாறு, மாநகர மேயர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆளுநருக்கு, இன்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து முழு உலகமும் பேசிக்கொண்டிருப்பதாகவும் குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து தமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அந்த அந்த அரசுகள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டு வருகின்றமையை அறிவோமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அந்த வகையில், இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளமையால், கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையாக முன்னேற்பாடாக மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அனைத்துப் பாடசாலைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக இன்று (12) அறிவித்துள்ளது.
“இந்நிலையில், அரசாங்கத்தின் குறித்த அறிவிப்பின் எதிர்பார்ப்பான மாணவர்களைப் பாதுகாக்கும் முன்னேற்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின், தனியார் கல்வி நிலைய கற்றல் நடவடிக்கைகளையும் பாடசாலை மீள் ஆரம்பம் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதுதான் பொருத்தமாக அமையும்.
“எனவே, நாளை முதல் 20ஆம் திகதி வரை, தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி மாணவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago