Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எனது கல்வி அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர், என்னால் வழங்கப்படும் நியாயபூர்வமான அறிவுறுத்தல்களைச் செயற்படுத்தி வருகின்றாரே ஒழிய, அவர் தன்னிச்சையாக எந்தவிதமான இடமாற்றங்களையும் செய்யவில்லை என, வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கம், வட மாகாண கல்வி அமைச்சு தொடர்பாக வெளியிட்ட பத்திரிகைச் செய்தி தொடர்பில், விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உண்மைக்குப் புறம்பாக வடக்கு மாகாணத்தின் கல்விக் கட்டமைப்பு முழுமையாக அரசியல் மயமாகி வருகின்றது என்ற தங்களின் குற்றச்சாட்டு, ஆதாரமற்றதும் ஏதோ ஓர் உள்நோக்கத்தைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டவிரோதமாகவோ அல்லது நீதிக்குப் புறம்பாகவோ அல்லது கல்வி நிர்வாகக் கட்டமைப்புகளையும், தாபன விதிகளையும் மீறியோ எமது கல்வி அதிகாரிகள் செயற்படவில்லை.
“இடமாற்றங்களைச் செய்வது கல்விப்பணிப்பாளரே ஒழிய, பிரத்தியேகச் செயலாளர் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இதேவேளை, எனது பிரத்தியேகச் செயலாளர் சாதாரண ஒரு அலுவரல்ல.
“எத்தனை ஆசிரியர்கள், தங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட ஒரே பாடசாலையில் எட்டு வருடங்களுக்கு மேல் கடமையாற்றுகின்றனர் என்ற தகவல்களையும், வெளிமாவட்டங்களில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கடமையாற்றாத ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களையும் மாகாணக் கல்வித் திணைக்களம் திரட்டிவருகின்றது.
“வடமாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை அலுவலர்களுக்கான பாரிய வெற்றிடம் நிலவிய காரணத்தால், கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சரின் அனுமதியுடன், சில ஓய்வு பற்ற கல்வி நிர்வாக சேவை அலுவலர்கள் கஷ்டப் பிரதேசங்களில் இயங்கும் வலயக் கல்வி அலுவலகங்களில் ஒரு வருட ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
“தற்பொழுது ஓரளவுக்குப் பதிய கல்வி நிர்வாக சேவை அலுவலர்களுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதால், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற கல்வி நிர்வாக சேவை அலுவலர்களின் சேவைகள் ஏற்கெனவே முடிவுறுத்தப்பட்டன என்பதையும் தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago