2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘தப்பிச் சென்றவர்களை நாட்டுக்கு அனுப்புமாறு விண்ணப்பிக்கவுள்ளோம்’

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில், கடந்த காலத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை, மீண்டும் நாட்டுக்கு அனுப்புமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பிக்க உள்ளதாக, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான நபர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரவுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X