Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழினத்தின் தொன்மையான அடையாளம் பறையாகும். ஆதித் தமிழ்ச்சமூகத்தின் தகவல் தொடர்பு சாதனமாகும். நாடி நரம்பெங்கும் முறுக்கேற்றும் அந்தப்பறை அரசியல் தொடங்கிப் பண்பாடு வரை தமிழ்மக்களின் சகல வாழ்வியல் தளங்களிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாய் மீளவும் ஓங்கி ஒலிக்கட்டும் என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
யாழ். என்டர்டெயின்ற்மென்ற் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு புத்தர் கலைக்கூடத்தைச் சேர்ந்தவர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பறை இசை நடனப் பயிற்சியின் இறுதிநாள் நிகழ்ச்சி திங்கட்கிழமை (22) இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பழந்தமிழர் வாழ்வில் அரச கட்டளைகளை, அறிவித்தல்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பிக்கும் ஊடமாகப் பறை பயன்பட்டது. தோலிசைக் கருவிகளின் தாயான பறை, மனதுக்கு ஊக்கமளிக்கும் அற்புதமான ஒரு இசைக்கருவியாகவும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனால், பிற்காலத்தில் பறை மரணச்சடங்குகளில் மாத்திரமே ஒலிக்கும் ஒரு கருவியாகவும், குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கருவியாகவும் மாற்றம் பெற்றுவிட்டது.
இந்தத் தவறான அணுகுமுறையால் பறை வழக்கொழிந்து வருகிறது. இது துரதிர்ஷ்டமானது. பறை குறிப்பிட்ட ஒரு மக்கள் கூட்டத்தினருக்கு உரியது அல்ல. இது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தினதும் முகம்.
பறை இசை நடனப்பயிற்சி பெற்ற இளைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். ஆனால், இந்தக் கலையைப் பயின்றிருக்கிறோம் என்ற சுயதிருப்தியுடன் மட்டும் இவர்கள் தங்களை மட்டுப்படுத்திவிடக்கூடாது. இதனை முகநூல் நட்பு வட்டத்தில் பகிர்ந்துகொள்வதுடன் மாத்திரம் திருப்தி அடைந்துவிடக்கூடாது.
கலை மக்களுக்கானது. அதுவும், பறை அடித்தட்டு மக்களுக்கான ஒரு எளிய கலை வடிவம். இதனை வெகுசனங்களிடையே எடுத்துச் செல்வதற்கு இங்கு பயிற்சிப்பெற்ற மாணவர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
18 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago