2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக வந்திருப்பது மகிழ்ச்சி

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண புதிய ஆளுநராக வந்திருக்கும் ரெஜினோல்ட் குரே தமிழ் பேசக்கூடியவராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறகையில்,

ஆசிரியராக இருந்தவர் கொடுத்துத்தான் பழக்கம் யாரையும் கெடுத்துப் பழக்கமிருக்காது. பல தகைமைகள் உள்ள ஒருவராக இவர் இருக்கின்றார். விஜயகுமாரதுங்கவின் கட்சியில் இருந்தவர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்வார்.

இவர் தமிழ் பேசும் தகுதி கொண்டவர் என்பதால், ஒவ்வொருவரும் கூறும் விடயங்களின் மனோநிலை என்ன என்பது அவரால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும் இவர் அரசியல் அனுபவமும் கொண்டவர் என்பதால், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவரை நியமித்தமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X