Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 02 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அரச கரும மொழியாக தமிழ் மொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தும், அது உரிய முறையில் அமுல்படுத்தப்படாத நிலையே காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பில் தற்போதைய அரசு கூடிய அக்கறைகொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வினாக்களை எழுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில், இன்று வியாழக்கிழமை (02) அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், அதில் மேலும் கூறியுள்ளதாவது,
'அண்மையில் பாடசாலை அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த புதிய அதிபர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இடம்பெற்றபோது, அதில் வழங்கப்பட்ட வழிகாட்டல் குறிப்பேடுகள் மற்றும் கையேடுகள் என்பன தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட தமிழ் மொழி மூல அதிபர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தெரியவருகிறது.
கல்வி அமைச்சில் தமிழ் மொழிக்கென தனியான பிரிவு இருக்கிறது. கல்வி இராஜாங்க அமைச்சராக தமிழர் ஒருவர் இருக்கிறார். இருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் தொடருகின்றன.
மேற்படி விடயம் மட்டுமல்லாது, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் பலவும் தமிழ் மொழிமூல பயனாளிகளுக்கு தனிச் சிங்கள மொழியூடான எழுத்து மூல கடிதங்கள் மற்றும் ஆவணங்களையே தொடர்ந்தும் அனுப்பி வருகின்ற நிலை தொடர்கிறது.
எனவே, இதனை அவதானத்தில் கொண்டு, தமிழ் மொழி அமுலாக்கத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என டக்ளஸ் தேவானந்தா, தனதறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago