Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
புதிதாக உதயமாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம் என்றும் இப்பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டத்தின் நிறைவில் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ' தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே மக்கள் தொடர்ச்சியாகப் அங்கிகாரத்தை வழங்கியுள்ளார்கள். எனவே அவர்களுக்காக நாம் அயராது பாடுபடுவோம். மக்களின் நலன் சார்ந்து மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக ரீதியாக யார் எங்களுடன் பேசவேண்டுமானாலும் பேசலாம், நாங்களும் எங்களுடைய தேவைகளை அறிந்து யாரின் ஆலோசனைகளை பெற வேண்டுமோ அவர்களுடன் பேச நாமும் ஆயத்தமாக இருக்கிறோம். அந்த வகையில் தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக ரீதியாக கூறும் கருத்துக்களையே நாமும் கூறி வருகிறோம் சிலவற்றை செய்தும் இருக்கிறோம்' என்றார்.
'கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் சில விடயங்களை நாம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம். அதாவது, இனப்பிரச்சினைக்கு தீர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு மக்கள் சொந்த நிலங்களில் மீளக்குடியமர வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலையும் என்பன முக்கியமாக கூறியுள்ளோம்.
மேலும், வெளிநாடுகளில் இருந்தும் புலம்பெயர் தமிழரிடம் இருந்தும் முதலீடுகளை பெற்று ஒரு திட்டங்களின் அடிப்படையில் முதலீடுகளை செய்வதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டு பொருளாதார வளமும் பலமடைந்து புதிய சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025