Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கத்தினூடாக தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது ரணிலை மாத்திரம் ஆட்சியில் இருத்துவது என்ற ஒன்றை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு செயற்படுவதாக” ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் “ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதனூடாக மாத்திரம் புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகளின் பிரச்சனை, காணி விடுவிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்பது கேள்விக்குறியே என தெரிவித்துள்ள அவர் இதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
தமக்கு விருப்பமான நபரை ஆட்சிக்கு கொண்டுவருவதுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயலுகின்றதே தவிர தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் செயற்படவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago