Freelancer / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
கூட்டமைப்பு எம் பிக்கள் தமிழரின் அரசியல் சுதந்திரம் பற்றி நினைக்கவே இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.
வவுனியாவில் போராட்டம் ஆரம்பித்து 2000ஆம் நாளை நினைவு கூர்ந்து இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த சங்கத்தின் செயலாளர் கோ ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எங்கள் இறுதி இலக்கு இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இறையாண்மை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதாக உள்ளது.
உலகின் நாம் தான் 2,000 நாட்கள், ஒரு வேளை உணவின்றி தொடர்ந்து போராடி வருபவர்களாக இருக்கின்றோம்.
எத்தனையோ தடைகளை கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் இது வரை 121 தாய்மார்களை இழந்துள்ளோம். மேலும் எங்கள் போராட்டத்தின் முதல் நாளில் இருந்து எங்களுடன் இருந்த 12 தாய்மார்கள் மற்றும் நான்கு தந்தைகள் உயிரிழந்தனர்.
நாங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளோம்.
இந்தியா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா ஸ்ரீலங்காவுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியது, தமிழர்களுக்கும் அவர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்மானத்திற்கும் எந்தவிதமான முயற்சியம் இந்தியா எடுக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம்.
சில இளம் வழக்கறிஞர்களைப் பார்த்தோம், நல்ல நம்பிக்கை வந்தது. அவர்கள் தேர்தலில் வெற்றி பெற உதவினோம். இப்போது இந்த எம்.பி.க்கள் சிங்களக் கைதிகள் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் குறித்து கவலை கொண்டுள்ளனர். எமது தமிழ் அரசியல் கைதிகளைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.
வாக்கெடுப்பு நடத்தப் போவதாக மக்களுக்கு உறுதியளித்தனர். ஆனால் இப்போது சமஷ்டி பற்றி பேசுகிறார்கள்.
TNA பயனற்றது என்று எங்களுக்குத் தெரியும், இப்போது அனைத்து தமிழ் MPக்களும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதைக் கண்டோம். தமிழரின் அரசியல் சுதந்திரம் பற்றி அவர்கள் நினைக்கவே இல்லை.
2,000 நாட்களில் நாங்களும் பலவற்றை கற்று சில உறுதியான முடிவுகளை எடுத்தோம்.
1. தமிழர்களுக்கு வடகிழக்கில் தாயகம் வேண்டும் .
2. இந்த தாயகம் பாதுகாக்கப்பான பாதுகாக்கப்பட்டதாக வேண்டும்.
3. பாலியல் பலாத்காரம், கடத்தல், கொலைகள், இனவழிப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குச் சொந்த இறையாண்மை இருக்க வேண்டும்.
4. ஐ நா வினால் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் நமது பாதுகாப்பை அடைவதற்கான முறையான வழி.
5. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.
6. நாம் இறையாண்மையைப் பெற்றால், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகும் .
7.எங்கள் குழந்தைகள் எங்கு என்று எங்களுக்குத் தெரியும். அவர்களில் சிலர் பாலியல் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், அவர்களில் சிலர் பிக்குகளாகவும், அவர்களில் சிலர் சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டனர்.
8. வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களைப் பார்க்க பாவமா இருப்பதாக கூறியிருந்தார் என்பதை நாம் இன்று சொல்ல விரும்புகிறோம். ஏனெனில் சிங்களவர்கள் தமிழுக்கு எதிராக வேலை செய்ய தமிழர்களை பணம் கொடுத்து உளவாளிகளாகவும், சம்பளம் வாங்கும் கொலைகாரர்களாகவும், பணம் கொடுத்து போதைப்பொருள் கடத்துபவர்களாகவும், பணம் கொடுத்து விபச்சாரிகளாகவும், தமிழ் கலாச்சாரங்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்தகிறார்கள்.
எமக்கு இறையாண்மை கிடைக்கும் வரையிலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரையிலும் இந்த போராட்டத்தை தொடர்வோம் என்றார். (R)
14 minute ago
21 minute ago
34 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
34 minute ago
43 minute ago